WhatsApp Company Warns Users Again | பயனாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள WhatsApp நிறுவனம்

WhatsApp's new privacy policy update Tamil

இந்த வருட ஆரம்பத்தில் WhatsApp நிறுவனம் ஆனது தனது புதிய தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு மற்றும் சேவை விதிமுறைகளை (privacy policy update and Terms of Service) அறிவித்தது. அத்துடன் அந்தகொள்கைகலானது தனிதநியுரிமைகளை மீறியது என பரவலாக பேசப்பட்டது.

WhatsApp's new privacy policy update Tamil
WhatsApp's new privacy policy update Tamil

இதற்க்கான காரணம் அதன் பயனாளர்களின் தரவுகளை தனது தாய் கம்பனி யான Facebook உடன் பகிர்வதாக அந்தகொல்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஏற்ப்பட்ட பிரச்சனைகளை சமாளிப்பதற்காக தனது தனியுரிமை கொள்கைகளை பயனாளர்கள் ஏற்ப்பதர்க்கான காலக்கெடுவை 8 February யில் இருந்து 15 May வரை நீடித்தது.

இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 7 May அன்று, ஏற்க்கனவே அறிவித்திருந்த 15 May என்ற காலக்கெடுவினை ஒத்திவைத்துள்ளது. இதன் பொருள் WhatsApp இன் முதுப்பினை ஏற்காத பயனர்களின் WhatsApp கணக்குகள் நீக்கப்படாது என்பதாகும்.

அத்துடன் WhatsApp செய்தியாளர் ஒருவர் கூறுகையில் "இந்த புதுப்பிப்பால் மே 15 அன்று எந்தக் கணக்குகளும் நீக்கப்படாது, இந்தியாவில் யாரும் வாட்ஸ்அப்பின் செயல்பாட்டை இழக்க மாட்டார்கள். அடுத்த பல வாரங்களில் மக்களுக்கு நினைவூட்டல்களைப் பின்தொடர்வோம்." என குறிப்பிட்டார்.

அத்துடன் WhatsApp இணையபக்கத்தில் நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும் தமது புதிய கொள்கைகளை ஏற்காத பயனாளர்களின் சேவைகளை படிப்படியாக ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. WhatsApp இன் புதிய கொளகைகளை அறிந்துகொள்ள WhatsApp உத்தியோக பூர்வ இணையபக்கத்தினை இங்கே click செய்வதன் மூலம் பார்வையிடலாம்.
Reactions

Post a Comment

0 Comments