நாளை முதல் தடையா ? Facebook, Twitter, Instagram, WhatsApp - BAN from Tomorrow - Problem / New Indian IT Rules ? Tamil

Indian New IT Rules in Tamil

Will India ban WhatsApp, Facebook, Twitter from May 26? Unlikely, but it is complicated Tamil
Will India ban WhatsApp, Facebook, Twitter from May 26? Unlikely, but it is complicated | Tamil

சில மாதங்களுக்கு முன்னர் சமூக இணையதளமான Twitter இற்கும் இந்தியாவின் மத்திய அரசிற்கும் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து மத்திய அரசு விரைவாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது. (மூன்று மாதங்களுக்கு முன்னர் – February 25)

இந்த விதிகள் (Rules) மிகவும் பரந்தளவில் காணப்படுவதுடன், இவை இந்தியாவினுள் தகவல்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்தையும் சாரும்.

அதாவது ஏறக்குறைய அனைத்து இணைய நிறுவனங்களும், அவை சமூக ஊடக நெட்வொர்க்குகள், செய்தியிடல் சேவைகள், செய்தி நிறுவனங்கள் அல்லது நெட்ஃபிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் என அனைத்துமே புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆகவே Twitter, Facebook, Instagram and WhatsApp போன்ற நிறுவனங்களும் இதற்குள் உள்வாங்கப்படும்.

இந்த விடயம் இப்பொழுது பேசப்படுவதற்கான காரணம், புதிய விதிகளுக்கு இணங்குவதற்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட காலக்கெடுவானத்து இன்று இரவு (May 25) உடன் முடிவடைகின்றது.

இதனாலே,  அனைவரிடமும் காணப்படும் ஒரு பெரிய கேள்வி: ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இந்தியாவில் நாளை முதல் தடை செய்யப்படுமா, அதாவது மே 26 முதல்? 

இதற்க்கான பதில் சாத்தியமில்லை என்றே கூறவேண்டும். நாளை முதல் இவற்றை முடக்குவதர்க்கான சாத்தியம் இல்லாவிட்டாலும், இந்திய அரசானது அவர்களது புதிய கொள்கைகளுக்கு இணங்காத நிறுவங்கள் மீது நடவவடிக்கைகளை எடுப்பதற்க்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இப்போது நாம் அரசால் வெளியிடப்பட்டுள்ள விதிகளில் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

1. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் - அரசாங்கம் அவர்களை “குறிப்பிடத்தக்க சமூக ஊடகங்கள்” என்று அழைக்கிறது – இவ்வாறான நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய இணக்க அதிகாரி இருக்க வேண்டும், அவர் தேவைப்படும் போதெல்லாம் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

உதாரணமாக:  ட்விட்டரிலிருந்து பயனர் A இன் தரவு அரசாங்கத்திற்கு தேவைப்பட்டால், மற்றும் கோரிக்கை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றால், இந்தத் தரவை தயாரிப்பதற்கு இந்த இணக்க அதிகாரி பொறுப்பேற்க வேண்டும்.

2. தொழில்நுட்ப நிறுவனங்கள் 24 x 7 மற்றும் அரசாங்கத்திற்கு இதுபோன்ற ஒருங்கிணைப்பு தேவைப்படும் போதெல்லாம் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கும் ஒரு நோடல் (Nodal officer) அதிகாரியை நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

3. சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, சமூக ஊடக பயனர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும் வகையில்.

4இறுதியாக, வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் அசல் அனுப்புநருக்கு ஒரு செய்தியைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. திறம்பட இதன் பொருள் செய்திகளில் இறுதி முதல் இறுதி குறியாக்கத்தை உடைத்தல் அல்லது மீறுதல்.

இது தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணையபக்கம் மற்றும் YouTube Video இணை அணுகுங்கள்.

மேலதிக விவரங்களுக்கு: 

youtube image
Reactions

Post a Comment

0 Comments