What is the CPU? | CPU என்றால் என்ன? | Tamil

Central Processing Unit (CPU) | Tamil

What is CPU? | CPU என்றால் என்ன? | Tamil

Central Processing Unit (CPU) என்பதன் தமிழாக்கம் மைய முறைவழியாக்க அலகு என்பதாகும். இது Central Processor எனவும் அழைக்கப்படுகின்றது, மனிதர்கள் செயற்ப்பட மூளை எவ்வளவு முக்கியமோ அதுபோன்றே கணனியின் CPU யும் முக்கியமான பகுதியாகும்.

Read: What is Android FRP? Tamil - Android FRP என்றால் என்ன?

இதனை கணனியின் மூளை எனவும் குறிப்பிடலாம். இன்று பலர் கணனி  அல்லது Monitor இணையே CPU என அழைக்கின்றனர் அனால் அவ்வாறு இல்லை.

எனவே இப்பதிவில் நாம்,
  • What is CPU? | CPU என்றால் என்ன?
  • What are the components of a CPU?
  • What does the CPU do? CPU என்ன செய்கிறது?
  • CPU history - CPU வரலாறு
  • Could computer work without a CPU?
போன்ற விடயங்கலையே பார்க்கப்போகின்றோம்.

What is the CPU? | CPU என்றால் என்ன?

Central Processing Unit (CPU) என்பது கணனியின் செயற்ப்பாடுகளை நிறைவேற்றும் ஒரு மின்னனியல் சுற்றமைப்பாகும். CPU ஆனது பணிசெயல் முறைமை (Operating System) மற்றும் பிரயோக மென்பொருள் (Application Software) ஆகியவற்றை முகாமை செய்கின்றது.

இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் CPU வானது எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை கீழே கற்றப்படுகின்ற படத்தின் மூலம் காணலாம்.

What is CPU? | CPU என்றால் என்ன? | Tamil
Input கருவிகளால் வழங்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை Process செய்து அவற்றை வெளியீட்டு (Output) கருவிகளுக்கு அனுப்புகின்ற பணியினையே பிரதானமாக செய்கின்றன.

இவ்வாறு பிரதான இடத்தைவகிக்கும் CPU ஆனது மூன்று கூறுகளை கொண்டுள்ளது அவை என்ன என்பதனை அடுத்ததாக பார்ப்போம்.


What are the components of a CPU? | CPU ஒன்றின் கூறுகள் என்ன?

What are the components of a CPU tamil

CPU ஒன்றானது தன்னுள்ளே காணப்படுகின்ற மூன்று கூறுகளை வைத்தே இயங்குகின்றது அவை,
  • எண்கணிதமும் தருக்க அலகும் - Arithmetic Logic Unit (ALU)
  • கட்டுப்பாட்டு அலகு - Control Unit (CU)
  • நினைவகப் பதிவகங்கள் - Memory Registers 
இவற்றின் தொளிர்ப்பாடுகள் என்ன என்பதனை கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணை மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Components of a CPU

எண்கணிதமும் தருக்க அலகும் - Arithmetic Logic Unit (ALU) எல்லாவகையான எண்கணித மற்றும் தருக்க செயல்களும் இதன்மூலமே செயற்ப்படுகின்றன.
கட்டுப்பாட்டு அலகு - Control Unit (CU) கணினித் தொகுதியின் எல்லா கூறுகளும் இதன் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன.
நினைவகப் பதிவகங்கள் - Memory Registers மையமுரைவளியாக்க அலகில் காணப்படுகின்ற எண்கணிதமும் தருக்க அலகில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முறைவழிகளுக்குத் தேவையான தரவுகளை நினைவகப் பதிவிலே தற்காலிகமாக தேக்கிவைக்கப்படுகின்றன.

What does the CPU do? CPU என்ன செய்கிறது?

CPU வின் பிரதான தொழிலானது ஒரு Computer Program மூலம் அல்லது Keyboard, Mouse, Printer போன்ற உள்ளீட்டு சாதங்கள் மூலம் தரவுகளை பெற்று வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப்ப தரவுகளை முறைவளிப்படுத்தி Moniter அல்லது Printer போன்ற வெளியீட்டு சாதனங்களுக்கு அத்தரவுகளை வளகுகின்றன. இதுவே CPU வின் பிரதான தொழிலாகும்.


CPU history - CPU வரலாறு

CPU ஆனது பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு பட்ட கொல்திரன்களோடு உருவாக்கப்படுகின்றன எவ்வாறாயினும் உலகிலே முதல் CPU வானது Intel நிருவானத்தால் 1970 உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட CPU வானது 4004 processor என அழைக்கப்படுகின்றது.

4004 processor - geektamizha

Could computer work without a CPU?

CPU இல்லாமல் கணனிகள் இயங்க முடியுமா என்ற கேள்வி உங்களிடம் காணப்படலாம். இதற்கான பதில் முடியாது என்பதாகும்.

நாம் இன்று பயன்படுத்தும் mobile களில் கூட குறைந்தளவு மின் தேவைப்படுகின்ற ARM என்ற CPU க்கள் காணப்படுகின்றன.

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து கணனிகளும் ஏதாவது CPU ஒன்றின் உதவியுடனே செயற்ப்படுகின்றது.

Reactions

Post a Comment

0 Comments