How to Find Your Motherboard Brand and Model - Tamil

Find Your Motherboard Brand and Model - Tamil

How to Find Your Motherboard Brand and Model - Tamil

இன்று கணனி பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் கணனி பற்றிய தகவல்கள் தெரிவதில்லை. இவ்வாறு அவற்றை அறியாதவர்கள் அன்றாட கணனி பாவனையில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். 

உதாரணமாக புதிய வன்பொருட்களை (hardware) கணனியுடன் இணைக்கும்பொழுது அல்லது கணனியில் காணப்படுகின்ற drivers மற்றும்  BIOS களை update செய்யும் பொழுது பயன்படுத்தும் கணனியின் தகவல்களை அறிந்துகொண்டாலே சிறப்பாக செய்து முடிக்கலாம்.

அந்தவகையில் நீங்கள் பயன்படுத்தும் கணனியின் தகவல்களை அறிந்துகொள்ளும் விதத்தினை தனித்தனியாக பதிவிடவுள்ளோம். 

எனவே இப்பதிவில் நாம் எவ்வாறு உங்கள் கணனியில் காணப்படுகின்ற தாய்ப்பலகை (motherboard) இன் brand மற்றும்  model இனை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதனையே பார்க்கபோகின்றோம்.

Read: What is Android FRP? Tamil - Android FRP என்றால் என்ன?

Motherboard பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள பல வழிகள் காணப்படுகின்றன அவற்றில் மிகவும் இலகுவான இரண்டு முறைகளையே நாம் இங்கே பார்க்கபோகின்றோம்.

கீழ் வழங்கப்பட்டுள்ள முறைகள் மூலம் எந்தவொரு மூன்றாம் தரப்பு மென்பொருளும் இல்லாமல் உங்கள் கணனியின் motherboard பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

பயன்படுத்தபோகும் முறைகளாவன:

  • Using Windows' System Information utility.
  • Command Prompt

1. Using Windows' System Information utility - Find Motherboard Brand and Model

இந்த முறையில் நாம் Windows களில் காணப்படுகின்ற ஒரு utility மென்பொருளினை பயன்படுத்தியே motherboard பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள போகின்றோம்.

இங்கு குறிப்பிட்ட System Information utility மென்பொருளினை அணுகும் விதமானது Windows 10 மற்றும் அதற்க்கு முன்னர் வந்த பதிப்புக்களில் வேறுபடுகின்றன.

முதலில் நாம் Windows 10 எவ்வாறு அனுகுவுவது என்பதனையும் அதன் பின்னர் Windows 7 இல் எவ்வாறு அணுகுவது என்பதனையுமே பார்க்கபோகின்றோம்.

Windows 10

  1. Windows key மற்றும் R key (Windows key + R) ஆகிய இரண்டு Button களையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.
  2. பின்னர் Run Window வானது காட்சியளிக்கும்.
  3. Run Window வினில் “msinfo32” என்பதனை type செய்து Enter இனை அழுத்துங்கள்.
  4. பின்னர் System Information Window வானது காட்சியளிக்கும், அதில் System Summary என்ற தலைப்பின் கீழ் உங்கள் motherboard பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
அல்லது Start சென்று "System Information" என்பதனை Type செய்வதன் மூலமும் உங்கள் இப்பக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
Step 1
How to Find Your Motherboard Brand and Model - Tamil

Step 2
Using Windows' System Information utility

Old Windows (7, 8.1)

  1. Start இனை Click செய்து All Programs இனை Click செய்யவும்.
  2. பின்னர் அங்கே Accessories என்ற தலைப்பின் கீழ் System Tools என்பதனை Click செய்யுங்கள்.
  3. அதன் பின் கானப்படுபவற்றில் System Information utility என்பதனை கண்டறிந்து Click செய்யுங்கள்.
  4. இதன் மூலம் மேலே காட்டப்பட்டுள்ள Window இனை பெற்றுக்கொள்ள முடியும்.

2. Using Command Prompt - Find Motherboard Brand and Model

நாம் மேலே குறிப்பிட்ட விதத்தினை தவிர்த்து Command Prompt இணையும் பயன்படுத்தி உங்களால் Motherboard பற்றிய தகவல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்க்கான வழிமுறையினை கீழே காணலாம்.

  1. Strat சென்று Command Prompt என type செய்து Open செய்யவும். அல்லது Ctrl + R என்ற Shortcode இனை அழுத்தி அங்கே தோன்றும் run window வில் CMD என type செய்து Enter இனைஅழுத்துவதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.
  2. பின்னர் தோன்றும் Command Prompt இல் கிழே வழங்கப்பட்டுள்ள Code இனை Paste செய்து Enter இனை அழுத்தவும்

Code

wmic baseboard get product,manufacturer,version,serialnumber

மேலே வழங்கப்பட்டுள்ள Code இனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் Motherboard இன்,

  • Product
  • Manufacturer
  • Version
  • Serial Number
போன்ற விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

How to Find Your Motherboard Brand and Model Command Prompt.PNG

Reactions

Post a Comment

0 Comments