What is Android FRP? Tamil - Android FRP என்றால் என்ன?

What is Android FRP? - Android FRP என்றால் என்ன?

What is Android FRP Tamil - Android FRP என்றால் என்ன

 IPhone இல் காணப்படுகின்ற Icloud Lock இனை போன்ற ஒரு பாதுகாப்பான ஒரு அம்சமே Android FRP Lock ஆகும். இது Android பதிப்புகளுக்காக Google இனால் அறிமுகப்படுத்தப்பட்ட  பாதுகாப்பு முறையாகும்.

எனவே இப்பதிவில் நாம்,

  • Android FRP Lock என்றால் என்ன?
  • Android FRP Lock எவ்வாறு இயங்குகின்றது?
  • Android சாதனத்தை எவ்வாறு பாதுகாகின்றது?
  • Android FRP Lock இனை எவ்வாறு நீக்குவது?

போன்றவற்றை தெளிவாக பார்ப்போம்.

Android FRP Lock என்றால் என்ன?

FRP என்பதன் விரிவாக்கம் Factory Reset Protection என்பதாகும். இது Android 5.1 lollipop பதிப்பு மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து Android பதிப்புகளிலும் (Version) காணப்படும் ஒரு சிறந்த பாதுகாப்பு அம்சமாகும்.


Android FRP Lock எவ்வாறு இயங்குகின்றது?

பொதுவாக நீங்கள் ஒரு Android சாதனத்தில் gmail account இனை பயன்படுத்தி Sign In செய்வதன் மூலமே உங்களால் google இனால் வழங்கும் Playstore போன்ற சேவைகளை பயன்படுத்தமுடியும்.

அதனால் நாம் எமது Android சாதனத்தை பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு Gmail முகவரியினை பயன்படுத்தி Sign In செய்கின்றோம் அல்லது அந்த சாதனத்தில் புதிதாக ஒரு Gmail Account இனை உருவாக்கி Sign in செய்கின்றோம்.


அவ்வாறு Sign In செய்யும் பொழுது FRP Lock ஆனது தானாக செயல்படுகின்றது.
அடுத்ததாக FRP ஆனது எவ்வாறு உங்கள் Android சாதனத்தை பாதுகாகின்றது என்பதனை பார்ப்போம்.

FRP Android சாதனத்தை எவ்வாறு பாதுகாகின்றது?

How does FRP protect an Android device

பொதுவாக நாம் பயன்படுத்தும் Android சாதனங்கள் தொலைந்து போவதற்கு அல்லது திருடப்படுவதற்க்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன அவ்வாறான சந்தர்ப்பங்களிலே FRP ஆனது உங்கள் சாதனத்திற்கான பாதுகாப்பினை வழங்குகின்றது.

FRP ஆனது உங்கள் Android சாதனத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றால் உங்கள் சாதனமானது ஒரு Gmail கணக்கினை பயன்படுத்தி Sign In செய்யப்பட்டிருக்க வேண்டியதுடன் ஏதாவது ஒரு முறையினை பயன்படுத்தி Screen Lock செய்யப்பட்டிருக்க வேண்டும்.


நாம் மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு விடயம் செயற்ப்படுத்தப்படாவிட்டால் உங்கள் Android சாதனத்தில் காணப்படுகின்ற FRP Lock ஆனது இயங்காமல் இருக்கலாம் அல்லது இலகுவாக நீக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் செயல்படும் நிலையில் உங்கள் Device இனை யாரவது கைப்பற்றி அதனை பயன்படுத்த வேன்றுமென்றால், நீங்கள் வழங்கியுள்ள Screen Lock இனை அவர் நீக்க வேண்டும்.

அவ்வாறு Screen Lock இனை நீக்குவதற்கு உங்கள் Device இனை Hard Reset செய்ய வேண்டும், அவ்வாறு reset செய்யப்பட்ட Device இனை பயன்படுத்த வேண்டும் என்றால் , அந்த சாதனத்தினை Reset செய்யும் முன்னர் இறுதியாக Sing In செய்யப்பட்டிருந்த Gmail Id மற்றும் அதன் Password இனை வழங்க வேண்டும்.

அவ்வாறு Gmail Id மற்றும் Password இனை வளங்கவிற்றால் அந்த சாதனத்தினை மேலும் பயன்படுத்த முடியாது. இவ்வாறே FRP ஆனது உங்கள் Android சாதனங்களை பாதுகாக்கின்றது.

Android FRP Lock இனை எவ்வாறு நீக்குவது? 

சில சமயங்களில் எமது அலற்சியத்தின் மூலமும் FRP Lock ஆனது செயல்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எவ்வாறு என்று சிந்திகின்றீர்களா?

சில சமயங்களில் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக நாம் எமது Android Mobile களை Factory Reset செய்யவேண்டிய தேவை ஏற்ப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் FRP பற்றிய தெளிவு இல்லாததன் காரணமாக உடனடியாக Mobile களை Factory Reset செய்து விடுகின்றோம்.

அவ்வாறு Factory Reset செய்தவுடன் FRP Lock ஆனது செயல்பட தொடங்கிவிடும்.

Reset செய்த பின்னர் Google கணக்கினை வழங்கவேண்டி ஏற்ப்படும். அச்சந்தர்ப்பத்திலே நாம் எமது Gmail கணக்கு நினைவில் இல்லை என்பதனை உணர்கின்றோம். அவ்வாறு Gmail கணக்கினை வழங்க முடியாததன் மூலம் அச்சாதனத்தினை எம்மால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்ப்படும்.

எவ்வாறு இவ்வாறான சூழ்நிலையினை தவிர்ப்பது.

இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக நீங்கள் செய்யவேண்டியாது 

  1. நீங்கள் ஏற்க்கனவே Log in செய்துள்ள Gmail Id மற்றும் Password நினைவில் உள்ளதா என Reset செய்வதற்கு முன்னர் உருதிப்படுத்திக்கொள்ளல்.
  2. அல்லது Reset செய்வதற்கு முன்னர் நீங்கள் Log In செய்துள்ள Gmail கணக்கினை நீக்கவேண்டும். 

Gmail கணக்கினை எவ்வாறு நீக்குவது

ஏற்க்கனவே Log In செய்யப்பட்டுள்ள கணக்கினை நீக்குவதற்கு கிழே காணப்படுகின்ற முறையினை பின்பற்றுங்கள்.
  1. Settings பக்கத்துக்கு செல்லுங்கள்
  2. பின்னர் Settings பக்கத்தினுள் Accounts என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்
  3. அங்கே காணப்படுகின்ற அனைத்து Gmail அல்லது Google accounts களையும் நீக்குங்கள்.
சில சமயங்களில் உங்கள் சாதனத்தின் Android பதிப்புக்களின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள முறை மாறுபடலாம்.

Google இல் தேடுவதன் மூலம் எவ்வாறு உங்கள் Device இல் Gmail கணக்கினை நீக்குவது என்பதனை உங்களால் அறிந்துகொள்ளலாம்.


Watch the Video

கிழேஉள்ள Video வினை பார்ப்பதன் மூலம் மேலும் சில தகவல்களை அறிந்துகொள்ளலாம்.


இப்போது உங்களுக்கு Android FRP Lock தொடர்பான அனைத்து சந்தேகங்களும் நீங்கியிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Reactions

Post a Comment

0 Comments