How to Do Blogger SEO Settings? Tamil – Blogger SEO Settings எப்படி செய்வது?

 Blogger SEO Settings எப்படி செய்வது?

How to Do Blogger SEO Settings? Tamil – Blogger SEO Settings எப்படி செய்வது?

How to Do Blogger SEO Settings? Tamil - பொதுவாக Blog ஒன்றினை ஆரம்பிக்கும் பொழுது அனைவரினதும் முதல் குறிக்கோளாக அமைவது Search Engine களின் முதல் பக்கத்தில் இடம்பிடிப்பதாகும். அதுவும் google இன் முதல் பக்கத்தில் இடம்பிடிப்பதே முதன்மையாக கருதுகின்றனர். 

அவ்வாறு எமது Blogger Blog கள் Search Engine களில் முதல் பக்கத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், எமது Blog இல் SEO சார்ந்த Settings களை சிறப்பாக அமைக்க வேண்டும். அதுவும் BlogSpot இல் ஆரம்பிக்கப்பட்ட Blog களில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். 

எனவே, இப்பதிவில் நாம்:

  • எவ்வாறு சிறந்த Domain இனை தெரிவு செய்வது?
  • Blogger SEO Basic Settings எவ்வாறு செய்வது?
  • Blogger இற்கான HTTPS எவ்வாறு இலவசமாக பெற்றுக்கொள்வது?
  • Blogger இற்கான Meta tags எவ்வாறு வழங்குவது?
  • Crawlers and indexing Settings களை எவ்வாறு செய்வது?
  • SEO Friendly Article களை எவ்வாறு எழுதுவது?
போன்ற Blogger இல் முக்கியமாக செய்யவேண்டிய Settings களை பற்றியே பார்க்கபோகின்றோம்.


எவ்வாறு சிறந்த Domain இனை தெரிவு செய்வது? 


எந்தவொரு இணைய தளத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் Domain Name ஆனது அதன் SEO [Search Engine Optimization] செயற்ப்பாடுகளில் பிரதான இடத்தை வகிக்கின்றது. ஒரு சிறந்த Domain இனை தெரிவு செய்யும் பொழுது பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே எவ்வாறு ஒரு சிறந்த Domain இனை தெரிவு செய்வது என்பதனை How to choose the best domain? Tamil என்ற எமது பதிவினை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

கிழே காட்டப்பட்டுள்ள Settings கள் அனைத்தும் உங்கள் Blogger இன் Settings பக்கத்திலே காணப்படுகின்றது. Settings பக்கத்துக்கு செல்ல Blogger Dashboard இல் இடது கீழ்புறமாக உள்ள Settings என்ற இடத்தில் Click செய்யவும்.

Blogger SEO Basic Settings எவ்வாறு செய்வது?


Blogger SEO Basic Settings எவ்வாறு செய்வது?

1. Title

இங்கே நீங்கள் வழங்கும் சொற்களே உங்கள் Blogger இன்தலைப்பாக காண்பிக்கப்படும். பொதுவாக இங்கே உங்களது Blog இன் Domain பெயரினே பிரித்து வழங்குவதாகும். உதாரணமாக எமது தளத்தின் Domain Name ஆனது geektamizha.com என்பதாகும். அதனை GEEK TAMIZHA என வழங்க வேண்டும்.

2. Description

Description என்ற பகுதியில் உங்கள் Blog பற்றிய விடயங்களை வழங்க வேண்டும். அதாவது உங்கள் Blog ஆனது எந்தவிதமான தகவல்களை பகிர்கின்றது, உங்கள் நோக்கம் என்ன போன்ற விடயங்களை 500 எழுத்துக்குள் வழங்க வேண்டும்.

3. Blog language

இந்த பகுதியில் உங்கள் Blog இனை நீங்கள் எந்த மொழியினில் எழுதுகின்றீர்கள் என்பதனை தெரிவு செய்ய வேண்டும். சரியான மொழியினை தெரிவுசெய்யுங்கள்.

4. Favicon

Favicon உங்கள் இணைய பக்கத்தினை தனித்துவமாக காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் 16×16 pixel அளவிலான சிறியதொரு icon ஆகும். இது குறிப்பாக இணைய Browser களில் ஒரே நேரத்தில் பல Tab களை திறந்து பயன்படுத்தும் பொழுது, குறிப்பிட்ட இணைய பக்கத்தினை இலகுவாக கண்டறிய பயன்படுத்தப்படுகின்றது. Favicon இனை நீங்கள் உருவாக்கி இங்கு upload செய்யவேண்டும்.


Blogger இற்கான HTTPS எவ்வாறு இலவசமாக பெற்றுக்கொள்வது?


HTTPS (Hypertext transfer protocol secure) என்பது உங்கள் இணையத்தளமானது பயனாளர்களுக்கு பாதுகாப்பானது என்பதனை உறுதிப்படுத்த பயன்படுத்தும் ஒரு முறையாகும்HTTPS பற்றி மேலும் தெரிந்துகொள்ள What Is https? Tamil என்ற பதிவினை வாசிக்கவும்.

நாம் மேலே குறிப்பிட்ட Basic Settings களை முடித்துவிட்டு Scroll செய்து கிழே வரும்பொழுது HTTPS என்ற ஒரு தலைப்பு காணப்படும் அதன் கீழ் உள்ள HTTPS availability மற்றும் HTTPS redirect ஆகிய இரண்டினையும் On செய்யுங்கள்.

properly enable HTTPS on your Blogger

Blogger இற்கான Meta tags எவ்வாறு வழங்குவது?


மேலே குறிப்பிட்ட Settings இனை on செய்தபின் Scroll செய்து கிழே வரும்போது Meta tags என்ற ஒரு தலைப்பு காணப்படும். அதன் கீழாக உள்ள Enable search description என்பதனை On செய்யுங்கள்.

Search Description என்பது நீங்கள் எழுதும் Blog post ஆனது எதனைப்பற்றி என்பதனை சுருக்கமாக வழங்குவதாகும். இது SEO வில் பிரதானமான இடத்தினை வகிக்கின்றது.

Search Description இல் உங்கள் Blog post பற்றி தகவல்களை வழங்கும் பொழுது Search Engine கள் உங்கள் Blog பதிவானது எதனை சார்ந்தது என்பதனை இலகுவாக கண்டறிகின்றது.


இங்கே நீங்கள் Search Description இனை On செய்வதன் மூலம் நீங்கள் பதிவிடும் ஒவ்வாரு பதிவிற்கும் (Post) தனித்தனியாக Search Description வழங்க முடியும்.

Blogger இற்கான Meta tags எவ்வாறு வழங்குவது

Crawlers and indexing Settings களை எவ்வாறு செய்வது?

Enable custom robots.txt

இது Blogger SEO Settings களிலே மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். Blogger இற்கான Crawlers and indexing Settings களை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பதனை How to Create the Robots.txt File for Blogger? Tamil  என்ற எமது பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Enable custom robots header tags

Custom robot.txt போன்ற ஒரு முக்கியமான settings robot header tags களாகும். இதனை வழங்குவதற்கு முதலில் நீங்கள் Enable custom robots header tags என்ற இடத்தில் Click செய்து அதனை onசெய்ய வேண்டும்.

Enable custom robots header tags
பின்னர் அதன் கீழாக உள்ள,
  1. Home page tags
  2. Archive and search page tags
  3. Post and page tags
போன்ற மூன்று விடயங்களையும் தனித்தனியாக Click செய்து கீழ் வழங்கப்பட்டுள்ள படங்களில் உள்ளவாறு அவற்றை மாற்றவேண்டும்.

Home page tags
All மற்றும் noodp ஆகிய இரண்டையும் மாத்திரம் on செய்ய வேண்டும்.
Home page tags

Archive and search page tags
noindex மற்றும் noodp ஆகிய இரண்டையும் மாத்திரம் on செய்ய வேண்டும்.
Archive and search page tags
Post and page tags
All மற்றும் noodp ஆகிய இரண்டையும் மாத்திரம் on செய்ய வேண்டும்.
Post and page tags

SEO Friendly Article களை எவ்வாறு எழுதுவது?


எவ்வாறு SEO Friendly Article அதாவது SEO விற்கு பொருத்தமான பதிவுகளை எவ்வாறு எழுதுவது என்பதனை கீழே உள்ள Video வினை பார்ப்பதன் மூலம் உங்களால் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

Reactions

Post a Comment

0 Comments