Top 5 Free Video Editing Software's in Tamil [2020]

Here I'm going to show you a list of free video editing software's for 2020 in Tamil

TOP 5 FREE VIDEO EDITING SOFTWARE'S IN TAMIL [2020]

இன்று பலபேர் தமது தொழில்களுக்கான விளம்பரங்களை Instagram, Facebook போன்ற சமூக வளையதளங்களில் காணொளி (Video) களாக பதிவிடுகின்றனர்.
அவை அவர்களுக்கு தமது தொழிலை அதிகமான வாடிக்கையாளர்களிடம் கொன்று செல்ல உதவுகின்றது 

அவ்வாறு நீங்களும் உங்கள் தொழிலிற்கான விளம்பரங்களை Video வாக உருவாக்கி பகிர நினைக்கின்றீர்களா? 

அல்லது நீங்கள் ஒரு YouTube channel இனை நடத்துகின்றீர்களா?
ஒரு Video Editor ஆகவேண்டும் என்று நினைக்கின்றீர்களா?

Read:   How to Create a YouTube Channel For Beginners - In Tamil

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு Video editing மென்பொருளினை (Software) பயன்படுத்தவேண்டிய தேவை உங்களுக்கு ஏற்ப்படும்.

பொதுவாக Video Editing மென்பொருட்களை நோக்கும் பொழுது அவற்றில் இரண்டுவகையான மென்பொருட்கள் (software) காணப்படும்.

அவை என்ன என்பதனை முதலில் பார்ப்போம்.

முதலாவது வகை: 
பணம் செழுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும். இவ்வாறு பணம் செழுத்திப் பெற்றுக்கொள்ளும் Video Editing மென்பொருட்கள் (Software's) ளில் அதிகமான சிறப்பம்சங்கள் காணப்படும்.

இரண்டாவது வகை: 
இவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இருந்தாலும் இவற்றில் காணப்படுகின்ற சிறப்பம்சங்கள் (Features) சற்று மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும்.

இவற்றில் எதனை தெரிவு செய்வதென்று சிந்திக்கின்றீர்களா? 

இப்பதிவினை படிக்க வந்துள்ள நீங்கள் தற்பொழுதுதான் Video Editing இனை படிப் படியாக கற்றுகொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

இல்லை, உங்களுக்கு Video Editing நன்றாகவே தெரியும் என்றால் நீங்கள் ஒரு Premium அதாவது பணம் செலுத்தி பெறக்கூடிய ஒரு Software இனை பயன்படுத்த முடியும்.

பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள தேவையில்லை அல்லது இலவசமான ஒரு software ரை பயன்படுத்தி Video Editing இனை கற்றுக்கொள்ள நினைக்கின்றீர்களா?

அப்படியானால் இப்பதிவானது உங்களுக்கானதே இப்பதிவில் நாம் இலவசமான 5 Video Editing Software களை பற்றியே பார்க்கப்போகின்றோம். [Top 5 Free Video Editing Software's in Tamil]

இப்பதிவில் நாம் காட்டியுள்ள அனைத்து Software களும் முற்றிலும் இலவசமானது. (அவற்றில் எந்தவிதமான Watermark or credit காணப்படாது.)


அடுத்ததாக எமது software பட்டியலில் உள்ள 5 Editing Software களை பார்ப்போம்.

1. OpenShot

Video Editing ஆரம்பிப்பவர்களுக்கு (beginners) சிறந்த ஒரு மென்பொருள்.
openshot-free-video-editor-Tamil
Openshot இல் காணப்படுகின்ற பயனர் இடைமுகமானது (User Interface) Video Editing கற்றுக்கொள்ள நினைக்கும் ஒவ்வருவருக்கும் மிகவும் இலகுவானதாக காணப்படும்.

ஏன் என்றால் மிகவும் அதிகமான கருவிகளை (Tools) உள்ளடக்கிய இடைமுகத்தை கொண்ட Video Editing software க்களை பயன்படுத்தி கற்றுக்கொள்ள நினைக்கும் பொழுது அது Editing முதலில் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு விடயமாககும்.

ஆனால் Openshot இல் காணப்படுகின்ற இடைமுகமானது Video Editing கற்றுக்கொள்ள விரும்புபாவர்களுக்கு ஒரு தீர்வாக அமையும்.

சிறப்பம்சங்கள் (Features):
  • மட்டுப்படுத்தப்படாத அடுக்குகள். (Layers): சிறந்த Video க்களை உருவாக்கும் பொழுது Watermarks, Background Audio அல்லது Video க்களை பயன்படுத்த நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமான Layers அதாவது அடுக்குகளை பயன்படுத்த வேண்டும. அதட்க்காக Openshot இல் காணப்படுகின்ற Unlimited Layers வசதியானது ஒரு சிறப்பம்சமாகும்.
  • Customize செய்யக்கூடிய தலைப்பு அட்டைகள். (Title-Cards): Openshot இல் காணப்படுகின்ற தலைப்பு அட்டைகளை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றியமைக்கலாம். தலைப்பு அட்டைகளை உருவாக்க செல்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
  • Animation களை உருவாக்கக்கூடிய வசதிகள்.
  • Video மற்றும் Audio க்களை இலகுவாக உட்செலுத்துவதட்க்கான Drag and Drop வசதி காணப்படுகின்றது.
  • Available for: Windows, Linux, Mac போன்ற பிரபால்யமான இயக்க முறைமைகளில் பயன்படுத்தலாம். (Available on Windows, Mac, and Linux.)
Cons: குறைந்தளவான Video Tutorial களே காணப்படுகின்றன.

2. Lightworks

lightworks-video-editor
Lightworks ஆனது இன்னும் ஒரு சிறந்த இலவச (Free) Video Editing மென்பொருளாகும். Lightworks  இல் இலவச மற்றும் கட்டண பாதிப்புக்கள் காணப்படுகின்றன.

பொதுவாக இதன் இலவச பாதிப்பே பெரும்பாலான பயனாளர்களுக்கு போதுமானது.

இதில் காணப்படுகின்ற Video Tutorial கள் மூலம் இலகுவாக Video editing இனை கற்றுக்கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள் (Features):
  • சிறந்த இடைமுகம் (User Interface): Lightworks இல் காணப்படுகின்ற இடைமுகமானது மிகவும் வேகமானதாகவும் துல்லியமானதாகவும் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.
  • பகிரும் வசதிகள் (Sharing Options): நீங்கள் உருவாக்க கூடிய Video க்களை Youtube, Vimeo, Facebook போன்ற வலயத்தளங்களுடன் lightworks இனை பயன்படுத்தி இலகுவாக பகிரலாம்.
  • பல அடுக்குகளை பயன்படுத்தலாம் . (Multi Layers)
  • Available for: Windows, Linux, Mac போன்ற பிரபால்யமான இயக்க முறைமைகளில் பயன்படுத்தலாம். (Available on Windows, Mac, and Linux.)
Cons: MPEG வடிவில் (Format) மாத்திரமே Video க்களை வெளியிடுகின்றது.

3. Shotcut 

shortcut-video-editor
Shortcut ஆனது இன்னுமொரு சிறந்த இலவச Video Editing மென்பொருளாகும். இது ஒரு திறந்த மூல மென்பொருள், அதாவது நீங்கள் Shortcut இனை Download செய்தபின் எந்த வித கட்டணமும் இல்லாமல் shortcut இல் உள்ள அம்சங்களை முழுமையாக பயன்படுத்தலாம்.

இவ் மென்பொருளானது Windows, Mac போன்றவற்றில் பயன்படுத்த முடியுமாக இருந்தாலும் அடிப்படையில் shortcut ஆனது Linux இயக்கமுறைமைக்கு (Operating System) என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

அதனாலோ என்னவோ சில பயனாளர்கள் shortcut இன் இடைமுகமானது சற்று விநோதமானது எனக் குறிப்பிடுகின்றனர்.
 
எது எவ்வாறாக இருந்தாலும் இலவச Video Editing மென்பொருட்கள் என்னும்பொழுது Shortcut அனது தவிர்க்க முடியாத ஒரு மென்பொருளாகும்.

சிறப்பம்சங்கள் (Features):
  • Audio, Video விற்கான அதரவு: Shortcut ஆனது FFmpeg வழியாக  பெரும்பாலான audio மற்றும் video வடிவங்களுக்கான ஆதரவை வழங்குகின்றது.
  • Audio filters: இதில் காணப்படுகின்ற Audio Filters களானது balance, bass and treble, bandpass filters மற்றும் Compress போன்ற இன்னும் பல வேலைகளை செய்கின்றமையும் ஒரு சிறப்பம்சமாகும்.
  • Available for: Windows, Linux, Mac போன்ற பிரபால்யமான இயக்க முறைமைகளில் பயன்படுத்தலாம். (Available on Windows, Mac, and Linux.)

4. Davinci Resolve

Davinci Resolve tamil
Davinci Resolve ஆனது எமது Top 5 Free Video Editing Softwares in Tamil என்ற பட்டியலில்காணப்படுகின்ற ஏனைய மென்பொருட்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் சிறந்த மற்றும் அதிகமான வசதிகளைகொண்ட ஒரு மென்பொருளாகும்.

இதில் editing, color correction, audio production, and video effects மற்றும் motion graphics போன்ற மிகவும் மேம்பட்ட வசதிகள் காணப்படுகின்றன. 

Davinci Resolve ஆனது Tv Shows, films போன்றவற்றை edit செய்யக்கூடிய professional Editor களால் கூட பயன்படுத்தப்படுகின்றது.

இதில் காணப்படுகின்ற அதிகமான editing வசதிகள் சில பயனாளர்களுக்கு சிக்கலாக இருந்தாலும், இதன் இலவசப்பதிப்பனது பெருமளவிலான video editing களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

சிறப்பம்சங்கள் (Features):
  • Color Grading, compositing and audio production போன்ற வேலைகளை Davinci Resolve ஆனது சிறப்பாகவே செய்கின்றது.
  • இதன் interface ஆனது வழக்கமான Editing வேலைகளை செய்வதற்க்கு மிகவும் சிறப்பானதாக காணப்படுகின்றது.
  • இதனுள் காணப்படுகின்ற கருவிகள் picture effects, retiming, stabilization, dynamic zoom, text, and audio போன்ற வேலைகளை மிகவும் துல்லியமாக செய்கின்றது.
  • Available for: Windows, Linux, Mac போன்ற பிரபால்யமான இயக்க முறைமைகளில் பயன்படுத்தலாம். (Available on Windows, Mac, and Linux.

5. HitFilm Express

Hitfilm express
HitFilm Express ஆனது இலவசமாக கிடைக்க கூடிய Video Editing மென்பொருட்களில் மற்றுமொரு சிறந்த மென்பொருளாகும். ஒருவேளை உங்களுக்கு Video Editing பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் HitFilm Express முதலில் கையாளும் பொழுது சற்று கடினமாகவே இருக்கும்.

Hitfilm ஆனது அதானை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை கற்பிக்கும் Video Tutorial களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

HitFilm ஆனது தொழில்முறை தர Video க்களை உருவாக்க நினைக்கின்றவர்களுக்கு ஒரு தீர்வாக அமையும்.

சிறப்பம்சங்கள் (Features):
  • மட்டுப்படுத்தப்படாத அடுக்குகள். (Layers)
  • Customize செய்யக்கூடிய workstation.
  • சிறந்த Audio வினை வெளியீடாக பெற்றுக்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள Audio Mixer கருவி.
  • Zoom, Push மற்றும் Dissolve போன்ற பல்வேறு Transition வடிவங்கள்.
  • Available for: Windows, Mac போன்ற இயக்க முறைமைகளில் மத்திரிரமே பயன்படுத்தலாம் (Available on Windows and Mac)

நாம் இப்பதிவில் பொதுவாக அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியுமான 5 இலவசமான (Free) Video Edit செய்யக்கூடிய மென்பொருட்கள் பற்றியே பார்த்தோம்.

Reactions

Post a Comment

0 Comments